சாகரிகா தொடருந்து மோதி முச்சக்கரவண்டி சாரதி மரணம்! மக்கள் போராட்டம்
கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' தொடருந்துடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பாதுகாப்பு கடவை
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடருந்து கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் தொடருந்து பாதையை மறித்து நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி தொடருந்து பாதையின் போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது.
பின்னர் பொலிஸார் தலையிட்டு, தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
அதன்பின்னர் அந்தப் பாதையில் தொடருந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை
கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு