ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை
பொருளாதார மீளெழுச்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பம்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்று நாமல் ராஜபக்ச தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.
நாமலின் ஆலோசனை
ஆனால், பொருளாதார பாதிப்புக்கான அடிப்படைக் காரணத்தை அவர் எவ்விடத்திலும் குறிப்பிடுவதில்லை.
2022ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பம் பொருளாதார ரீதியாக எடுத்த தவறான தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் ஏக மனதாக அறிவித்தது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்குதான் சர்வதே நாணய நிதியத்தின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
பொருளாதார மீட்சி குறித்து ஆலோசனை கூறும் நாமல் ராஜபக்ச அதற்கு காரணம் தனது குடும்பம் தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தை வீழ்த்துவோம், மக்களை ஒன்றிணைப்போம் என்று ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் இரவிரவாக கூட்டம் நடத்தாமல் மக்களுக்கு மத்தியில் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.