தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபர் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் பெரஹெராவிற்காக பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியதோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கைது

தலதா மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை அந்த நபர் வாய்மொழியாகத் திட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.