இலங்கையில் பரபரப்பு நிலையில் வங்கிகள் - அடுத்தடுத்து சிக்கப் போகும் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் CID
இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மேற்கொள்ள வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
வங்கிகளின் முக்கிய அதிகாரிகள்
இந்த விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரிடம், பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பணப் பரிவர்த்தனைகளை சில வங்கிகளின் ஊடாக மேற்கொள்வதற்கு அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியுள்ளனர்.
பணப் பரிவர்த்தனை
பொதுவாக ஒருவர் வங்கியின் ஊடாக ஒரு கணக்கிற்கு அதிகளவிலான பணத்தை மாற்றும் போது, அதற்கான காரணங்களை விளக்கும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சில வங்கிகளின் ஊடாக பரிமாற்றம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயங்களின் அடிப்படையில், வங்கிகளின் ஊடாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளோம்” என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று தனியார் வங்கிகளுக்கு அதிடியாக புகுந்த அதிகார்கள், முகாமையாளர்களை கைது செய்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் எந்த நேரத்தில் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச நிலையில் வங்கி அதிகாரிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam