இனவாதம் - மதவாதம் பேசி அடுத்த தேர்தலுக்கு தயாராகும் சிலர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பான சர்ச்சையை இனவாதமாகப் பார்க்க வேண்டாம் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவரான சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள், உண்மைத்தன்மையை உணர்ந்து அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க வேண்டும். இன ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது.
தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவும் ஒற்றுமையைப் பேண வேண்டியதன் இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற கருத்துக்களைப் பரப்பி, வரவிருக்கும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் லாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர்.
மேலும், கல்முனை வைத்தியசாலை விவகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் வேண்டுமென்றே இனவாதத்தைத் தூண்டி, தங்களின் சுயநலத்திற்காக மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து
450 கோப்புகள் - காசோலைகள் எங்கே..! மகிந்தவை மறந்து போன என்பிபி அரசாங்கம் - அரசியல் மேடையில் அதிரடி காட்டிய ஜோன்ஸ்டன்