சாந்தனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மனுத்தாக்கலானது நேற்றையதினம்(27.09.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த பத்து மாதங்களாக தான் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள தனது வயதான தாயை பார்க்க போக முடியவில்லை என்றும் மனுவில் சாந்தன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு அனுப்பமாறு கோரிக்கை
மேலும் மனுவில், தன்னை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்றும் எனவே என்னை விரைவாக இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு விரைவாக தண்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கமைய சாந்தன் தாக்கல் செய்த மனுவானது எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.






பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
