இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: 12 அமெரிக்க எம்.பிகள் வலியுறுத்தல்

Sri Lanka United States of America
By Sheron Sep 26, 2023 05:50 PM GMT
Report

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கின் உறுதிசெய்ய வேண்டுமென, அந்நாட்டின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இலங்கையில் அரச படைகள் மற்றும் இதர அரச அமைப்புகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமன சித்திரவதைகள் குறித்து தமது கடித்தத்தில் அவர்கள் விபரித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையில் பென்சில்வேனியா மாநிலத்திலிருந்து தெரிவான ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சம்மர் லீ அம்மையாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சரவதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி நடந்து கொண்டது ஆகியவற்றிற்கு இலங்கையை முறையாக குற்றஞ்சாட்ட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை அவர்களது கடிதம் விரிவாக விபரிக்கிறது.

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி


ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தீர்மானத்தின் கீழ் இலங்கை மீது அமெரிக்க வெளிவிவகார அமைச்சு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“எமது அபிப்பிராயத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பதானது அமெரிக்கா கடைபிடித்து வரும் மனித உரிமைகள் மற்றும் அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கு எதிரானதாகும், அது நிலை நிறுத்தபப்ட வேண்டும்” என்று அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: 12 அமெரிக்க எம்.பிகள் வலியுறுத்தல் | Sri Lanka Should Brought To International Court

ஷெல் தாக்குதல்கள்

இலங்கை அரசும் அதன் இராணுவமும் பாரிய சர்வதேச குற்றங்களை இழைத்துள்ளதாக, அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“இலங்கை அரசும் அதன் இராணுவமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நம்பத்தகுந்த வகையில் பாரியளவில் சர்வதேச குற்றங்களைச் செய்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கனடாவில் எதிர்ப்பு போராட்டம்

இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கனடாவில் எதிர்ப்பு போராட்டம்


அதிலும் குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை, இலங்கை இராணுவம் திட்டமிட்டு- வேண்டுமென்றே தமிழ் பொதுமக்கள் மற்றும் சிவிலியன் நிலைகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியது.

அதிலும் மருத்துவமனைகள் மற்றும் அரசால் போர் நிறுத்த வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இத்தாக்குதல் இடம்பெற்றது”.

“இலங்கையின் அரச படைகள் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் யுவதிகளை- அவர்களை கொலை செய்வதற்கு முன்னரோ அல்லது அதற்கு பிறகோ- பாலியல் பலாத்காரம் மற்றும் வன்புணர்ச்சி செய்தனர்”.என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கடிதத்தில் இலங்கை இராணுவம் செய்த பாலியல் துஷ்பிரயோகங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லாமை குறித்தும் தமது கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கு பதவி உயர்வு போன்ற மதிப்பளிப்புகளைச் செய்யும் கலாச்சாரம் இலங்கையில் நிலவுகிறது.”

 குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

“இந்த குற்றச்சாட்டுக்களை சுயாதீனமாக விசாரணை செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதிலாக, போர்க்குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு இலங்கை அரசாங்கம், அரசு அல்லது இராணுவத்தில் உயர் பதவிகள் அளித்து கௌரவித்தது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: 12 அமெரிக்க எம்.பிகள் வலியுறுத்தல் | Sri Lanka Should Brought To International Court

அதில் சிலர் இன்றும் பதவியில் உள்ளனர்”, என தமது ஆழ்ந்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். நீதிபரிபாலனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்த, தொடர்ச்சியாக வந்த அரசுகள் தவறிவிட்டன என்றும், அதனால் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சு சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் பிரிவு 30இன் கீழ் அந்த விதிகளை மீறியதற்காகவும், அந்த விதியின் கீழான தனது கடப்பாடுகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காகவும் இலங்கை அரசு மீது முறைப்படியன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


அதுமாத்திரமன்றி அங்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவும் அவர்கள் மூன்று கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

இதை எட்டுவதற்கு முதலாவதாக பேச்சுவார்த்தைகளை நடாத்தலாம் எனவும், அந்த பேச்சுவார்த்தகள் தோல்வியடைந்தாலோ அல்லது பலனளிக்கவில்லை என்றாலோ அல்லது முட்டுக்கட்டை ஏற்பட்டாலோ அடுத்த கட்டமாக மத்தியஸ்தம் மூலமாகச் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர்.

அந்த வகையில் பிரச்சினை ஆறு மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை என்றால், இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபப்ட வேண்டும் என அந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

காதலர்களுக்கு முக்கிய தகவல் - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

காதலர்களுக்கு முக்கிய தகவல் - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு


கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளை சார்ந்த அந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கனுக்கு எழுதிய கடிதத்தை ’பேர்ள்’ உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US