புடினின் கடுமையான திட்டம்.. அமெரிக்க உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய போர்த் திட்டம் குறித்து அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
உக்ரைன் முழுவதையும் கைப்பற்றவும், ஐரோப்பாவின் சில பகுதிகளை மீண்டும் பெறவும் புடின் திட்டமிட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தவிர்த்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குச் சொந்தமான ஐரோப்பாவின் சில பகுதிகளையே புடின் குறிவைத்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறையின் இந்த அறிக்கைகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
முக்கிய பேச்சுவார்த்தைகள்
ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்கா சார்பில் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பவர்களும், போரை முடிவுக்கு கொண்டுவர புடின் கடும் முயற்சிகள் முன்னெடுப்பதாகவே விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

விளாடிமிர் புடினின் இந்த ரகசிய திட்டம் தொடர்பில், மிக சமீபத்தில் வெளியான உளவுத்துறை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தாம் ஐரோப்பாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருப்பதில்லை என தொடர்ச்சியாக புடின் கூறிவரும் கருத்தையும் அமெரிக்க உளவுத்துறை நிராகரித்துள்ளது.
2022-ல் புடின் தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்க உளவு அமைப்புகளின் இந்த அறிக்கைகள் உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றன.
உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டமைப்பு நாடுகளின் பிரதேசங்கள், நேட்டோ உறுப்பினர்கள் உட்பட, புடின் விரும்பும் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உளவு நிறுவனங்களின் கருத்துக்களுடன் அமெரிக்க உளவுத்துறையின் தேடல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.