மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த தென்னாப்பிரிக்கா
உலகக் கிண்ண டி20 தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் 2ஆவது வெற்றியை பதிவு செய்த தென்னாபிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய ஆட்டத்தில் 3 விக்கட் வித்தியாசத்தில் தனது வெற்றியை தென்னாபிரிக்க அணி பதிவு செய்தது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சார்ஸ் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டியானது 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதோடு 124 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா அணி
இதற்கமைய 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார் .
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சார்ஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த தொடரில் B குழுவில் இடம்பிடித்துள்ள 4 அணிகளில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளன.
எனினும் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
இதே தொடரின் A பிரிவில் எவ்வித அணியும் தகுதி பெறாத நிலையில் இந்தியா அணி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும், A குழுவில் ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தங்களுக்கான அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |