இலங்கை அணியை தோற்கடித்த தென்னாபிரிக்க கிரிக்கட் அணி
சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க அணி, இன்று 233 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, துடுப்பாடிய இலங்கை அணி, தமது டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் ஆகக்குறைந்த எண்ணிக்கை ஓட்டங்களான 42 ஓட்டங்களை பதிவு செய்தது.
நான்காம் நாள்
அதனைத் தொடர்ந்து, தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தமது ஆட்டத்தை இடைநிறுத்தி இலங்கை அணியை துடுப்பாடச்செய்தது.
இந்தநிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி, போட்டியின் நான்காம் நாளான இன்று, 282 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து, போட்டியில், 233 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |