ரணிலுக்கு முன்னர் பொன்சேகாவுக்கு வந்த அழைப்பு! உடன்படாத கோட்டாபய
அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்கோ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்ற ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணிலுக்கு முன்னர் பொன்சேகாவுக்கு வந்த அழைப்பு

நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்திருப்பேன்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என கூறப்பட்டது.
அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை. செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு ஜனாதிபதி உடன்படவில்லை.
இதனையடுத்து, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.