நாட்டுக்காக ஐ.மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாராகும் ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்காக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ருவான் விஜேவர்தன இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. “
ஏமாற்றுதலை தோற்கடிப்போம்- இணைந்து எழுந்திருப்போம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ருவான் விஜேவர்தனவே தலைமையேற்று நடத்தி வருகிறார்.
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஓரணியில் இணைப்பது தொடர்பாக ருவான் விஜேவர்தன கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.