ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு மற்றுமொரு ஐரோப்பிய நாடு பிறப்பித்துள்ள உத்தரவு
உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவில், பதிவு செய்யப்பட்ட பயணிகள் காா்கள் போலந்து நாட்டின் எல்லைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தங்களின் 27 உறுப்பு நாடுகளின் எல்லைப் பிராந்தியத்துக்குள் நுழைய ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது போலந்து நாட்டிலும் இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலாந்து அமைச்சக அதிகாரி தெரிவிக்கையில்,
கொடூரமான போா் நடவடிக்கைகள்
உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யாவின் கொடூரமான போா் நடவடிக்கைகளைக் கண்டித்து ரஷ்யா மற்றும் அதன் மக்கள் மீது விதிக்கப்படும் மற்றொரு தடை இது.
மேலும் சா்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ரஷ்யா இருந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளில் இந்தத் தடை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தற்போது போலந்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை நடவடிக்கை ‘இனவெறித் தாக்குதல்’ என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதேவ் விமா்சித்தது குறிப்பிடத்தக்கது.