அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை
இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து காரணமாக மீதமுள்ள கண்காட்சி போட்டிகள் இரத்து செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
