நேதன்யாகுவின் அமெரிக்க விஜயம்: வகுத்துள்ள புதிய திட்டம்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் முதல் நிலை கோடீஸ்வரரான டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.
இது குறித்து எக்ஸ்(டுவிட்டர்) கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது,
WATCH LIVE: Prime Minister Benjamin Netanyahu holds a one on one conversation with @elonmusk.https://t.co/gsnFhAFI2F
— Prime Minister of Israel (@IsraeliPM) September 18, 2023
அதிசயத்தக்க மாற்றங்கள்
''கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன்.
அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன்.
மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.