IMFஇன் நிதியானது பொருளாதாரத்தை மோசமாக்கலாம்: அச்சம் வெளியிடும் இலங்கையர்கள்
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மோசமாக்கும் என்று சுமார் 45 வீதமான இலங்கையர்கள் நம்புகிறார்கள் என வெரிடே ரிசர்ச் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
எனினும் 28 வீத மக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என நம்புகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட மாதிரிகள்
இந்தநிலையில் 27வீதமானோர் எவ்வித முடிவையும் எடுக்கமுடியாதுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட 1,008 இலங்கையர்களிடம் நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதேவேளை ஆசியாவில் கொள்கை தீர்மானங்கள் தொடர்பில் பகுப்பாயும் வகையில் வெரிடே
ரிசர்ச் நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.