எதிர்பாராத தாக்குதல்! உக்ரைனின் அணுமின் நிலையத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்
உக்ரைனின் - கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை ஜனாதிபதி வோ . ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இந்த தாக்குதலில் ரஷ்யா 143 ட்ரோன்களை ஏவியதாகவும் அதில், 95 ட்ரோன்களை இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 ட்ரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது இரு நாடுகளும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், இராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
