யாழில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி
யாழ்.வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி இன்று(16) உயிரிழந்துள்ளார்.
வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சிறுவன் பலி
இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில்,
இன்று மாலை குறித்த சிறுவனின் தாயார், அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சிறுவன் தனிமையில் இருந்துள்ளார்.
இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த சிறுவன் முற்பட்ட வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது
வீட்டுக்கு உறவினர்கள் வந்த போது சம்பவத்தை அவதானித்து சிறுவனை சிகிச்சைக்காக வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பொலிசார் விசாரணை
எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், சிறுவனின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
