வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
உடல் முழுவதிலும் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் அத்தனகல்லை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாழடைந்த வீடொன்றில் மேற்படி இளைஞரின் சடலம் காணப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்படி இளைஞர் சிலரால் கடத்தி வரப்பட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அத்தனகல்லை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri