ரஷ்யா – உக்ரைன் போர்: கடல் வழித் தாக்குதல்களால் பதற்றம் அதிகரிப்பு
உக்ரைன் தாக்குதலால் லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் ரஷ்யாவின் மெர்குரி போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஜனாதிபதி செலென்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயுதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அதேநேரம், நவம்பர் 22 அன்று பால்டிக் கடலில் ரஷ்யாவின் Sparta II சரக்குக் கப்பல் ட்ரோன் தாக்குதலில் தீப்பற்றி எரிந்தது. இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருக்கலாம் என பின்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்
இதற்குப் பதிலடியாக உக்ரைனின் இராணுவக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ், நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமை ரஷ்யாவுக்கு இருப்பதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
எனினும், தற்போதைக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய நேரடி அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடல் பிராந்தியத்தில் பதற்றம்
உக்ரைன் தற்போது ரஷ்யாவின் தரைவழி இராணுவ இலக்குகளை மட்டுமின்றி, கடற்படை மற்றும் சர்வதேச கடல் வழி வர்த்தகக் கப்பல்களையும் குறிவைக்கிறது.

இதனால் பால்டிக் கடல் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதுடன், ரஷ்யா–நேட்டோ மோதல் விரிவடையும் அபாயமும் உருவாகியுள்ளது.