யாழில் அதிர்ச்சி சம்பவம்! வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடக்காடு பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஆறு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் முடக்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கிருந்த மகன், மகள் மற்றும் பெற்றோர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதலின் பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri