மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லை! ஆனால் பொலிஸார் விதித்துள்ள நிபந்தனைகள்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பவர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இதன்போது, சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து வரும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் ஞா. கிஷோரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
மாவீரர் தின நினைவேந்தல்
கலந்துரையாடலின்போது, மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பொலிஸாரால் எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடைசெய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும், நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸார் அறிவுறுத்தியதாக ஞா. கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடந்த காலங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் - கிரிக்கெட்டுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய ஜம்ஷெட் ஆலம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri