விகாரையில் மணியடிக்கும் நாய்! பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் செயல்

Viral Video Viral Photos
By Shadhu Shanker Nov 24, 2026 06:25 AM GMT
Report

இலங்கையின் ஹெம்மாத்தகம, மெதிலிய பகுதியில் அமைந்துள்ள புராதன விகாரையில் வசிக்கும் நாய் ஒன்று, தனது வியக்கத்தக்க பழக்கவழக்கங்களால் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சுமார் ஆறு வயதுடைய இந்த நாய், 'ரெக்ஸ்' என்றும் 'சூட்டி புதா' (செல்ல மகன்) என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான பழக்கம்

விகாராதிபதியும் ஓய்வுபெற்ற அதிபருமான இலுக்கொட ஞானானந்த தேரரால் சிறுவயது முதல் வளர்க்கப்பட்டு வரும் ரெக்ஸ், விகாரையின் அன்றாட சமய நடவடிக்கைகளில் தனக்கென ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, தினமும் தர்ம போதனை ஆரம்பமாவதற்கு முன்னர், பக்தர்கள் முன்னிலையில் சென்று விகாரை மணியை ஒலிப்பது அதன் வழக்கமாக உள்ளது.

விகாரையில் மணியடிக்கும் நாய்! பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் செயல் | Viral Dog Incident Sri Lanka

தேரர் மணியடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தும் வரை தொடர்ந்து மணியடிப்பது ரெக்ஸின் வியக்கத்தக்க செயலாகக் கூறப்படுகிறது.

இதனுடன் அதன் மற்றுமொரு சுவாரஸ்யமான பழக்கமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

மணியடித்து முடித்த பின்னர், விகாரை வளாகத்திலிருந்து ஒரு கல்லை வாயில் கவ்விக்கொண்டு வந்து விகாரைக்குள் வைப்பதன் மூலம் தனது பணியை நிறைவு செய்துவிட்டதாக தேரருக்கு உணர்த்துகிறது.

 தர்ம போதனை 

அதேபோன்று, பௌர்ணமி தினங்கள் உள்ளிட்ட விசேட சமய நிகழ்வுகளின்போது தர்ம போதனை நடைபெறும் இடத்தில் அமைதியாக அமர்ந்து, போதனை நிறைவடையும் வரை கவனமாகச் செவிமடுப்பதும் ரெக்ஸிடம் காணப்படும் மற்றுமொரு தனித்துவமான பழக்கமாகும்.

விகாரையில் மணியடிக்கும் நாய்! பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் செயல் | Viral Dog Incident Sri Lanka

அறநெறிப் பாடசாலை நடைபெறும் நாட்களில் சிறுவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதிலும் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதிலும் ரெக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவதாக ஞானானந்த தேரர் தெரிவிக்கிறார்.

விகாரையின் பாதுகாப்பு விடயத்திலும் ரெக்ஸ் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறது. தேரர் விகாரையில் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர் தங்கியிருக்கும் அறைக்குள் வெளியாட்கள் நுழைவதை அனுமதிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இறுதி விலங்குப் பிறவி

மேலும், தேரர் விகாரையை விட்டுச் செல்லும் வேளைகளில், அவர் மீண்டும் திரும்பி வரும் வரை உணவு மற்றும் தண்ணீரைக்கூட உட்கொள்ளாமல் இருக்கும் பழக்கத்தையும் ரெக்ஸ் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு விலங்கிடம் காணப்படும் இத்தகைய விசுவாசம், பழக்கவழக்கம் மற்றும் அன்பு ஆகியவை விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.

ரெக்ஸின் இந்த விசித்திரமான நடத்தைகள், மனிதர்களுக்கும் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசம் தொடர்பான பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், ரெக்ஸின் இந்தப் பிறவியே அதன் இறுதி விலங்குப் பிறவியாக அமையும் என்பது ஞானானந்த தேரரின் நம்பிக்கையாக உள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US