சர்ச்சைகளுக்குப் பின்னர் அதிரடி மீள் நியமனம்! என்விடியாவின் முக்கிய முடிவு
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia), அதன் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது.
இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
உடனடியாக நடைமுறை
முன்னதாக, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் மற்றும் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடனான தொடர்பு குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, நவம்பர் 12ஆம் திகதி அவர் பதவி விலகியிருந்தார்.
எனினும், குறித்த உளவு குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல தரப்பினரின் அழுத்தம் மற்றும் ஊழியர்கள், பங்குதாரர்களின் ஆதரவைத் தொடர்ந்து ஹுவாங் மீண்டும் பதவிக்குத் திரும்பியுள்ளார்.
அவரை மீண்டும் நியமிக்கும் முடிவுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
மீள் நியமனச் செய்தி
மேலும், அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற பின்னர், அவரது மீள் நியமனத்தால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.
ஹுவாங்கின் மீள் நியமனச் செய்தியைத் தொடர்ந்து, என்விடியா பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 31 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான சிப்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக என்விடியாவை வளர்த்ததில் ஹுவாங் முக்கிய பங்காற்றியுள்ளார்.
நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைமை அதிகாரியான கோலெட் கிரெஸ் தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.