பெரும் பதற்றத்தில் ரஷ்ய - உக்ரைன் யுத்தகளம்: பேச்சுவார்த்தையில் கடும் நிபந்தனை விதித்தது உக்ரைன் (Video)
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் முழுமையாக வெளியே உத்தரவிடுமாறு உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதம் தெரிவித்தன.
அதன் அடிப்படையில், பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் குழு பெலாரஸ் சென்றடைந்தது. இதனைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பெலாரஸில் ரஷ்யா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும்; அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும், கிவ் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தில் பெரும் படைகள் 30 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு உள்ளது என்றனர்.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
யுத்தகளம் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் இருந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
"ஞாயிற்றுக்கிழமை கடினமான நாள்’’ உக்ரைன் இராணுவம் அறிவிப்பு
அணு குண்டு தாக்குதல் நடத்திய, அமெரிக்காவுக்கே ஜப்பானில், அணுவாயுதங்களை நிறுவ அனுமதி?
ரஷ்யாவிற்கு விழுந்த பலத்த அடி! மிகப் பெரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ள ரஷ்யாவின் ரூபிள் நாணயம்
தீவிரமடையும் போர் களம்! ரஷ்யா எடுக்கவுள்ள விஸ்வரூபம் - பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்பு (Photos)
ரஷ்யாவிற்கு மற்றொரு அடி! மத்திய வங்கியுடன் வணிக உறவை துண்டித்தது இங்கிலாந்து