ரஷ்யாவிற்கு விழுந்த பலத்த அடி! மிகப் பெரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ள ரஷ்யாவின் ரூபிள் நாணயம்
ரஷ்யாவின் நாணயமான ரூபிள், அமெரிக்க டொலருக்கு நிகரான 20 வீதம் அளவில் மிகப் பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பையும் சரிவையும் ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் ரஷ்யாவிற்கு எதிராக தடைவிதித்து வந்தன. இந்த தடையானது ரஷ்யாவின் ரூபிள் நாணயம் வீழ்ச்சியடைய காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக அமெரிக்கா உட்பட உலகின் முக்கிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால், ரஷ்யாவின் ரூபிள் மிகப் பெரியளவில் பெறுமதியை இழந்துள்ளது. இந்த பெறுமதி இழப்பானது மேலும் 40 வீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரூபிள் நாணயத்தின் மதிப்பிழப்பானது ரஷ்யா மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அதேபோல், இதற்கு இணையாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் டொலர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயங்களும் அமெரிக்க டொலருக்கு நிராக ஒரு வீதம் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
இதனிடையே கூகுகள் நிறுவனம், உக்ரைனின் நேரடி செய்மதி படங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு படையினர், இந்த செய்மதி படங்களை பயன்படுத்தியே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலை சீர்குலைக்கும் நோக்கில், கூகுள் பிரதானிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
you may like this video...