அணு குண்டு தாக்குதல் நடத்திய, அமெரிக்காவுக்கே ஜப்பானில், அணுவாயுதங்களை நிறுவ அனுமதி?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, நாட்டில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து தனது நாடு பரிசீலிக்க வேண்டும் என்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சர்ச்சைக்குரிய வகையில் பரிந்துரைத்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலின் போது உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் குறித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, தாய்வான் மீதான சீனப் படையெடுப்பு அல்லது கிழக்கு சீனக் கடலில் உள்ள ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளை கையகப்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
இந்தநிலையிலேயே அமெரிக்காவுக்கு ஜப்பானில் அணுவாயு நிறுவல் விடயத்தில் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று முன்னாள் பிரதமர் கோரியுள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர், ஜப்பான் தனது எல்லையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ, உற்பத்தி செய்யவோ அல்லது நிலைநிறுத்தவோ அனுமதி வழங்குவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்காவின் அணு குண்டு தாக்குதல் காரணமாக ஹிரோசிமா மற்றும் நாகஸாசி ஆகிய நகரங்கள் அழிவடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
]

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
