சார்லஸ் ஜேம்ஸ் கிர்க் படுகொலை! அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய அறிவிப்பு..
அமெரிக்க அரசியல் ஆர்வலர் சார்லஸ் ஜேம்ஸ் கிர்க் கொலை தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 (£73,645) வரை வெகுமதி அளிப்பதாக அமெரிக்காவின் சட்ட நடைமுறையாக்க மற்றும் உளவுத்துறை அமைப்பு (FBI) அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக நம்பகமான, நெருங்கிய நண்பரான அரசியல் ஆர்வலர் சார்லஸ் ஜேம்ஸ் கிர்க், நேற்றுமுன்தினம்(10) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விடயமானது அமெரிக்காவில்ல மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உயர் ரக துப்பாக்கியை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு இருண்ட காலம்
அந்த துப்பாக்கிதாரியை கண்டுப்பிடிக்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இது அமெரிக்காவுக்கு இருண்ட காலம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 (£73,645) வரை வெகுமதி அளிப்பதாக FBI அறிவித்துள்ளது.
தகவல் உள்ளவர்கள் தொலைபேசி எண் மூலம், வெளியில் இருந்து தொடர்பு கொள்ளவும், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நிகழ்நிலையில் சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
நேற்யை தினம் வரை பொதுமக்களிடமிருந்து 130 உதவிக்குறிப்புகளைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
