ரஷ்யாவிற்கு மற்றொரு அடி! மத்திய வங்கியுடன் வணிக உறவை துண்டித்தது இங்கிலாந்து
மொஸ்கோவின் நிதி நிறுவனங்களை மேற்கத்திய சந்தைகளில் இருந்து துண்டிக்கும் நடவடிக்கையாக, ரஷ்யாவின் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நிதி நிறுவனங்களை மொஸ்கோவின் நிதி அமைச்சகம் மற்றும் அதன் இறையாண்மை நிதியுடனான பரிவர்த்தனைகளிலிருந்தும் தடை செய்யும்,
அத்துடன் ரஷ்ய நிறுவனங்கள் இங்கிலாந்தில் மாற்றத்தக்க பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை கருவிகளை வழங்குவதையும் தடுக்கும்.
இதேவேளை மேலும் பொருளாதார தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை ரஸ்யா மீது அதிக செலவுகளை சுமத்தும். அத்துடன் இந்த மோதல் நீடிக்கும் வரை சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை துண்டித்துவிடும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
]
வங்கி வட்டி விகிதங்களை இரண்டு மடங்காக உயர்த்திய ரஸ்ய மத்திய வங்கி!
ரஸ்யாவின் மத்திய வங்கியானது அதன் முக்கிய வட்டி விகிதத்தை 9.5% இல் இருந்து 20% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது
இது ரூபிள் தேய்மானம், அதிக பணவீக்க அபாயங்கள் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த வட்டி விகித அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது நாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நாணய வருவாயில் 80% விற்பனை செய்யும் ரஸ்ய மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது
இதேவேளை ரஸ்ய பொருளாதாரத்திற்கான வெளிப்புற நிலைமைகள் கடுமையாக மாறிவிட்டன என்று ரஸ்ய மத்திய வங்கி ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்களுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நடத்த இடம் ஒன்றை தயார் செய்துள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஸ்ய படையெடுப்பில் சேர தமது துருப்புக்களை அனுப்பத் தயாராக இருப்பதாக, பெலாரஸ்ஸின் ஜனாதிபதி- அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்திருந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையை பெலாரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
"பெலாரஸில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான இடம் தயார் செய்யப்பட்டுள்ளது,
தூதுக்குழுக்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது" என்று பெலோரஸின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய கொடிகளுடன் ஒரு நீண்ட மேசையின் படத்தையும் அது வெளியிட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எதனையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று உக்ரெய்ன் குறிப்பிட்டுள்ளது.
பேச்சுவார்த்தை எந்த முடிவையும் தரும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்..
உக்ரைனில் படையெடுக்கும் எவரும் கொல்லப்படுவார்கள்! உக்ரெய்ன் அழகி எச்சரிக்கை!
“மிஸ் உக்ரைன்” பட்டம் வென்ற அழகி அனஸ்தீசியா லென்னா, படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள் என இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஸ்யா, தொடர்ந்து 5வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கீவில் ரஸ்ய-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 4,300 ரஸ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அரசாங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ரஸ்ய மற்றும் உக்ரைன் போர் 5வது நாளாக நீடித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள உக்ரைன் நாட்டு பொதுமக்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
உக்ரைன் இராணுவத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பொதுமக்களில் பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர்.
அந்தநாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வியாடோஸ்லவ் யுராஷ் (வயது 26) கீவ் நகரை காக்க துப்பாக்கியுடன் வீதியில் இறங்கியுள்ளார்.
ஆர்வமுடன் படைகளில் சேருவோர், வன பகுதியிலும், ஆளில்லா பகுதிகளிலும் இராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டு நகர சாலைகளில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (வயது 31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராமில் உக்ரெய்ன் மீது, படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
போலந்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சில உக்ரேனிய இராணுவ வீரர்கள், இந்திய மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை தாக்கி அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லையில் இருந்த இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவ வீரர்கள் தாக்கியதாகவும், அவர்களை பயமுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
"உங்கள் இந்திய அரசாங்கம் உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை, நாங்கள் ஏன் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறியே அவர்கள் இந்திய மாணவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரியுள்ளார்.
My heart goes out to the Indian students suffering such violence and their family watching these videos. No parent should go through this.
— Rahul Gandhi (@RahulGandhi) February 28, 2022
GOI must urgently share the detailed evacuation plan with those stranded as well as their families.
We can’t abandon our own people. pic.twitter.com/MVzOPWIm8D
உக்ரெய்னுக்குள் படைகளை அனுப்ப தயாராகும் பெலாரஸ்!
ரஷ்ய துருப்புக்களுக்கு ஆதரவாக செயற்படும் பெலாரஸ் - தற்போது ரஷ்ய படையெடுப்புக்கு உதவும் வகையில், உக்ரைனுக்கு தனது சொந்த வீரர்களை அனுப்ப தயாராகி வருவதாக தகவல்கள் உள்ளன.
வோஷிங்டன் போஸ்ட், பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பெலாரஸ் இன்று தமது துருப்புக்களை உக்ரெய்னுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில், கிய்வ் இன்டிபென்டன்ட் என்ற செய்தி நிறுவனம், பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி பெலாரஷ்ய பரா துருப்புக்கள், உக்ரெய்னுக்குள் அனுப்பப்படலாம் என்று கூறியுள்ளது.
நீண்டகால ரஷ்ய நட்பு நாடான பெலாரஸ், உக்ரைனின் வடக்கே எல்லையில் அமைந்துள்ளது.
இந்தநிலையில் அந்த நாட்டின் அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அணுசக்தி அல்லாத அந்தஸ்தை விலக்கிக்கொள்ள வாக்களித்தது - இது, ரஷ்யா, பெலாரஸ்ஸில் ஆயுதங்களை நிறுவுவதற்கு வழி வகுத்துள்ளது.
இதேவேளை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பில், பெலாரஷிய துருப்புக்கள் உக்ரைனுக்குள் அனுப்பப்பட மாட்டாது என்று உறுதியளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ரஸ்யாவை கண்டிக்க மறுத்துள்ள பிரேசில்!
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பரிகசிக்கும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரெய்னின மக்கள் ஒரு நகைச்சுவை நடிகரின் கைகளில் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ரஷ்யாவின்,உக்ரெய்ன் மீதான படையெடுப்பைக் கண்டிக்க அவர் மறுத்துவிட்டார்,
அத்துடன் பிரேசில் மற்றும் ரஷ்யா "நடைமுறையில் சகோதர நாடுகள்" என்று கூறியுள்ளார்.
கனடா வான்பரப்பில், ரஷ்ய விமான பறப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஸ்யாவின் வர்த்தக விமானம் ஒன்று கனேடிய வான் பரப்பில் பறந்ததாக கனேடிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏரோஃப்ளோட் ஃப்ளைட் 111 என்ற இந்த விமானத்தின் நடத்தையை கவனத்தில் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கனேடிய அமைச்சு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதேவேளை ரஸ்யாவின் ஐந்தாம் நாள் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்கள், மிகவும் தீர்மானமானவை என்று உக்ரெய்னிய ஜனாதிபதி வெலாடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இப்போது காலை 7 மணியாகப்போகிறது. ரஸ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், கியேவில் அபாய ஒலிகள் ஒலிக்கும்போது சூரியன் உதயமாகிறது.
நகரவாசிகள் பலர் தொடர்ந்து நிலத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களில் நேற்று இரவில் அதிக வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
உக்ரைன் தலைநகரின் புறநகர் பகுதியில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதல்களை முறியடிக்க முடிந்தது என்று உக்ரெய்ன் கூறுகிறது.
“அழைக்கப்படாத விருந்தினர்களிடமிருந்து எங்கள் வீட்டைப் பாதுகாக்க முடியும் என்பதை நாங்கள் காட்டினோம்" என்று ஆயுதப் படைகளின் தளபதி கேர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார்