ரஷ்யா - உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை: தற்போதைய நிலவரம் குறித்து வெளியான தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான சமாதான பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம் எதுவுமில்லை என ரஷ்யாவின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் எண்ட்ரி ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலையடுத்து, இன்றையதினம்(02.06.2025) இருதரப்பு முக்கியஸ்தர்களும் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் இன்னும் முக்கிய விடயங்களில் முரண்படுவதாக எண்ட்ரி ஃபெடோரோவ் கூறியுள்ளார்.
முக்கிய பிரச்சினை
கலந்துரையாடலில் முக்கிய சில அரசியல் கேள்விகளுக்கு இரு தரப்பும் பதில் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு தரப்பினரும் சமாதான முன்மொழிவுகளுக்கான குறிப்பாணைகளை முன்வைத்தாலும் அவை ஒன்றுக்கொன்று மிகவும் முரண்பட்டவை என அவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையற்ற, உடனடி போர்நிறுத்தத்தை ரஷ்யா விரும்பவில்லை எனவும் இதுவே முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri