மீண்டும் உக்ரைன் - ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்று முடிந்த நிலையில் ரஷ்யாவால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜெலன்ஸ்கியின் முன்னணி ஆலோசகர்
எனினும், ஜெலன்ஸ்கியின் முன்னணி ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம்.
இதன் அர்த்தம், ரஷ்யாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது” என கூறியுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri