சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூடு! இலக்குவைக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர்
மொனராகலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமார மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
மொனராகலை - வெல்லவாய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பத் குமார காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் இன்று (30) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
விசேட சுற்றிவளைப்பு
“வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லவாய பிரதேசத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” என்பவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தாவை” கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனால் “மஹவெலமுல்ல ஷான் சுத்தா”வின் கால் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த மஹவெலமுல்ல ஷான் சுத்தா” வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
