இலங்கையில் இருளில் மூழ்கிய பல இடங்கள்! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடைகள் ஏற்பட்டு, இருள் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்தடைகள் குறித்து இதுவரையில், 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்தடை முறைப்பாடுகள்
மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் தற்போது சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்தடைகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சாரசபை, முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
