உக்ரைன் ரஷ்ய போரில் திடீர் திருப்பம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் சாத்தான் 2ஐ களமிறக்கும் ரஷ்யா
நாளுக்கு நாள் அதிரிக்கும் உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யா தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தான்-2 என அழைக்கப்படும் குறித்த ஏவுகணையை போரில் களமிறக்க தயார் நிலையில் வைத்திருக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை களமிறக்கப்பட்டால் யுத்தத்தில் உக்ரைன் தரப்பு பின்னடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக எதிர்வுகூறப்படுகின்றது.
இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
208 தொன் எடை கொண்ட ஏவுகணையானது 114 அடி நீளம் கொண்டது எனவும் மணிக்கு 15,880 மைல்கள் வேகத்தில் 11,000 மைல்கள் தொலைவு வரை பாயக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அணு ஆயுத தாக்குதல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் நோக்கில் சாத்தான்-2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து 1,600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரித்தானியாவை வெறும் 6 நிமிடங்களில் அந்த ஏவுகணையால் சென்றடைய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் இந்த ஏவுகணைக்கு ஒப்பான ஆயுதம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
2022ல் இருந்தே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மர்மமான முறையில் தாமதம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சாத்தான்-2 ஏவுகணையானது ஜூன் மாதத்தில் இருந்து களமிறக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தாலும், தற்போது தான் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |