ரஷ்யாவின் கோரத் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி
உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து ரஷ்யா ஒரே இரவில் நடத்திய மிகப்பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உக்கிரமான தாக்குதலில் உக்ரைனின் டினிப்ரோ நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கிருந்து 8 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டன.
டினிப்ரோ நகரில் மட்டும் மொத்தம் 12 பேரும், தலைநகர் கீவ் நகரில் 6 பேரும் பலியாகியுள்ளனர்.மேலும், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
18 பேர் பலி
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறுகையில், பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் நாட்டின் மின்சார/ஆற்றல் கட்டமைப்புகளைக் குறிவைத்தே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம்(1.6.2026)ஒரே இரவில் மட்டும் ரஷ்யா 656 தாக்குதல் ட்ரோன்களையும், 73 அதிநவீன ஏவுகணைகளையும் உக்ரைன் மீது ஏவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனின் ராணுவக் கட்டமைப்புகளை மட்டுமே தாங்கள் குறிவைத்ததாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
இந்தத் தொடர் குண்டுமழையால் அச்சமடைந்த கீவ் நகர மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுரங்க தொடருந்து நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேவேளையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி மற்றும் கிராஸ்னோடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan