ஒரே இரவில் ரஷ்யா நடத்த எண்ணிய திட்டம்! தடுத்து நிறுத்திய உக்ரைன் படைகள்
ஒரே இரவில் தன்னை சிறைபடுத்தி, தங்கள் தலைவரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, ரஷ்ய மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகும் உரிமையை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் தற்போது உறுப்பினராக இல்லை. ஆனால் அதில் சேருவதற்கான விருப்பங்களை அந்நாட்டின் அரசியலமைப்பு உள்ளடக்கியுள்ளது.