உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள்! கொல்லப்பட்ட பெருமளவான மக்கள்
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறு சீனா, புடினிடம் கோரிக்கை!
உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் சீனா, ரஷ்யாவை ஆதரிப்பதாக, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தெரிவித்துள்ளார். சீன தொலைக்காட்சி செய்தி ஒன்றில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம் உக்ரெயன் மீதான ரஷ்ய தாக்குதலை
"படையெடுப்பு" என்று கூற மறுத்துவிட்டது என்ற செய்தி வெளியாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது |
ஐரோப்பிய ஒன்றியத்தை உக்ரைன் ஜனாதிபதி கண்டித்துள்ளார்
உக்ரைனில் ரஷ்யர்களின் முன்னேற்றத்தை குறைக்க ஐரோப்பிய தலைவர்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய தாங்கிகளின் நெடுவரிசைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் ஐரோப்பாவில் நீண்ட காலத்திற்கு முன்னர், குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது பார்த்ததைப் போலவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியத் தலைவர்கள் விரைவாகச் செயல்பட்டால், ரஷ்ய "ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு இன்னும் தாமதமாகவில்லை என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள குடிமக்கள், உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கோரி, தங்கள் அரசாங்கங்களை தமது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். |
மொஸ்கோ உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பவில்லை
மாறாக உக்ரைனின் இராணுவமயமாக்கலை இல்லாதொழிப்பதே நோக்கம் என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டை வீழ்த்துவது ரஷ்யாவின் விருப்பமா என்று கேட்ட கேள்விக்கு
பதிலளித்த, லாவ்ரோவ், உக்ரைன்னை ஜனநாயக நாடு என்று அழைக்க முடியாது என்று
குறிப்பிட்டுள்ளார். |
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்! கொல்லப்பட்ட பொதுமக்கள்
உக்ரைன் மீது நடத்தப்பட்ட ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. "எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள்" காரணமாக உக்ரைனில் குறைந்தது 127 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றும் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. சில வேளையில் இது குறைவான மதிப்பீடாக இருக்கலாம் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. |
எங்கள் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டன – ரஷ்ய அதிகாரிகள்
ரஷ்யா படைகள் தற்போது யுக்ரேன் தலைநகரமான கீவுக்கு அருகில் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளனர். உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், “எதிரி” கீவின் நாடாளுமன்றத்திற்கு வடக்கே சுமார் 9 கி.மீ தொலைவிலுள்ள ஒபோலான் மாவட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளது. உள்ளூர் மக்களை பெட்ரோல் குண்டுளைத் தயாரித்து எதிர்க்குமாறு ஊக்குவித்ததோடு மற்றவர்களை பாதுகாப்பான இடம் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளது. “மக்கள் கவனமாக இருங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்” என்றும் யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கீவில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் முன்னர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவித்திருந்த போதிலும், அது எதைக் குறிக்கிறது என்பதைத் தற்போது தெரிந்துகொள்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர். அதோடு அதிகளவு சத்தத்தோடு குண்டுகள் வெடிப்பதைக் கேட்க முடிவதகாவும் அவர்கள் கூறுகின்றனர்.
|
அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் உக்ரைன் மக்கள்
கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து ரஷ்யா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் மால்டோவா, ரொமானியா, போலந்து, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். |
உக்ரைனின் கேர்சன் பகுதி அரசு கட்டிடத்தில் ரஷ்யா கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் ரஷிய தேசியக் கொடியை அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஏற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைனின் செர்னோபில் மற்றும் மிலிடோபோல் நகர்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |
உக்ரைன் தலைநகரில் ரஷ்ய இராணுவ வாகனங்கள்!
உக்ரைனின் தலைநகர் கிய்வின் நகர மையத்திற்கு வடக்கே உள்ள ஒபோலோன் வழியாக ரஷ்ய இராணுவத் தாங்கிகள் வீதிகளில் பயணிப்பதை போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மணி நேரத்தில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்ய படைகள் குடியிருப்பு பகுதியில் ஊடுருவியதை உறுதி செய்தது. இந்த காணொளி உள்ளூர் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
|
24 மணி நேரத்தில் 33 பொதுமக்கள் தளங்கள் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைனின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். "ரஷ்யர்கள் தாங்கள் பொதுமக்கள் இலக்குகளை தாக்கவில்லை என்று கூறுகிறார்கள், எனினும் கடந்த 24 மணி நேரத்தில் 33 சிவிலியன் தளங்கள் தாக்கப்பட்டுள்ளன" என்று அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
வியாழன் அன்று படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனின் வடக்கு, கிழக்கு
மற்றும் தெற்கில் உள்ள பல முனைகளில் இருந்து வேகமாக முன்னேறிய பின்னர் ரஷ்யப்
படைகள் தலைநகர் கிவ்வை மூடியுள்ளன. |
ரஷ்யா , உக்ரெய்னில் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளின் போது முதல் நாளில் தனது நோக்கங்களில் எதையும் பெற்றுக்கொள்வதில் தோல்வியடைந்துள்ளது என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார். உக்ரேனியர்கள் போரிட்டதால் அது தோல்வியடைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். புடினின் தற்பெருமை காரணமாக அது தோல்வியுற்றது. ரஷ்ய தாங்கிகள் மற்றும் விமானங்களை உக்ரேனியர்கள் தாக்கியமையால் புடினின் முயற்சி தோல்வி கண்டுள்ளது என்றும் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ரஸ்ய படையினர் 450 போரில் இறந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார் |
உக்ரேய்னின் தலைநகரை கைப்பற்ற தீவிர தாக்குதல்களில் ரஸ்ய படைகள்! உக்ரெய்னை பிரிக்கவும் திட்டம் உக்ரெய்ன் மீது ரஸ்யா நடத்தும் தாக்குதல்களில் இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும் என்று உக்ரேனிய உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஹெராஷ்சென்கோ எச்சரித்துள்ளார். வடகிழக்கு மற்றும் வடமேற்கில் இருந்து தலைநகருக்குள் பிரவேசிக்க ரஸ்ய படைகள் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை உக்ரெய்னின் தலைநகரை கைப்பற்றும் நோக்கத்துடனேயே ரஸ்யாவின் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உக்ரெய்ன் உளவுத்துறை எச்சரித்துள்ளது. எல்லையில் தாக்குதல்களால், கியேவ் விமான நிலையத்தையும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவது. பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை நாசப்படுத்துதல் உக்ரேனிய ஆயுதப்படைகள் நடமாடுவதைத் தடுக்க அகதிகளின் வெளியேற்றத்தைத் தூண்டுவது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றி அரசாங்க தலைமையை கைப்பற்றி, ரஷ்ய நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்துவது.
அத்துடன் ரஷ்ய சார்பு தலைவர்களை கொண்டு வந்து உக்ரைனை கிழக்கு மற்றும் மேற்கு
என்று ஜெர்மனியை போன்று இரண்டு பகுதிகளாக பிரிக்கவும்
ரஸ்யா திட்டம் வகுத்துள்ளதாக உக்ரெய்னிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. |
ரஸ்ய படையினர் தற்போது உக்ரெய்ன் தலைநகரில் ரஷ்ய படையினர் இப்போது உக்ரெய்னின் தலைநகர் கிய்வில் இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் ட்வீட் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, எதிரிகள்" ஓபோலோன் மாவட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், மக்களை பாதுகாப்பான இடங்களை தேடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும் "குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்குமாறும் - கவனமாக இருக்குமாறும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உக்ரெய்ன் அதிகாரிகள் கேட்டுள்ளனர். |
உக்ரைனில் இடம்பெறும் முதல் நாள் ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உக்ரைன் குடியிருப்பாளர்கள் நிலத்தடி மெட்ரோ தொடருந்து நிலையங்களுக்கு சென்றனர். கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையங்களில், வயதான குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட - குடியிருப்பாளர்கள் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகத்தின் மதிப்பீட்டின்படி 100,000 க்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
உக்ரைனுக்கு நேர் கிழக்கே அமைந்துள்ள போலந்து அகதிகளின் வருகைக்காக அதன்
எல்லையில் வரவேற்பு மையங்களையும் அமைத்துள்ளது. |
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாவது நாளான இன்று காலை முதல்
இடம்பெற்ற நிகழ்வுகளை தருகிறோம்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு தேசிய உரையை நிகழ்த்தினார், இதன்போது வெள்ளிக்கிழமை அதிகாலை தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை பல ரஷ்ய படையினர் தாக்கியதை அவர் உறுதிப்படுத்தினார். கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மீது முன்னேறிய பின்னர், ரஷ்யா உக்ரேனிய தலைநகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.. உக்ரேய்ன் கிழக்கில் பிரிந்து சென்ற பகுதிகளிலும், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலும் கடுமையான சண்டையுடன், நாடு முழுவதும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. படையெடுப்பின் முதல் நாளான நேற்று - குறைந்தது 137 பொதுமக்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. அவர்களில் 13 உக்ரேனிய காவல்துறையினர், கருங்கடலில் ஒரு சிறிய பிரதேசத்தை ஸ்னேக் தீவை பாதுகாக்கும் நடவடிக்கையின் போது மரணமாகினர். உக்ரேய்னின் வடக்கில் செர்னோபில் அணுசக்தி தளம், ரஷ்ய படைகளிடம் வீழ்ந்த நிலையில் உக்ரைன் படையினர் அங்கு பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்ய வங்கிகள், நிறுவனங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை வெளியிட்டன. மேற்கத்திய நாடுகளும் உக்ரேனியப் படைகளுக்கு உதவி மற்றும் இராணுவப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் அழைத்து செய்து தாக்குதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.
இந்தநிலையில் உக்ரேய்ன் ஜனாதிபதி இன்று காலை நிகழ்த்திய உரையில், மேற்கத்திய தடைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார், "நேற்றைய நாள் போலவே, உலகின் மிக சக்திவாய்ந்த சக்திகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். |
உக்ரைனில் தொடரும் பதற்ற நிலை
உக்ரைன் தலைநகர் கீவில் வெள்ளிக்கிழமை காலை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதேநேரம் நகரின் வான் பாதுகாப்பு பல ஏவுகணையால் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளது. இதனை உக்ரேனிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார் இந்தநிலையில் ஏவுகணை தாக்குதல் காரணமாக கியேவில் ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பற்றி எரிவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் |
துப்பாக்கிச் சண்டையின் காட்சிகளை வெளியிட்ட உக்ரைன் இராணுவம்
உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் உக்ரேனிய பொலிஸாருக்கும் ரஷ்ய படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் காட்சிகளை உக்ரைனின் இராணுவம் வெளியிட்டுள்ளது. சுமி நகரம் - 260,000 க்கும் அதிகமான மக்கள் தொகையுடன் - ரஷ்ய எல்லையில் இருந்து 30 கிமீ (19 மைல்கள்) க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள ஒரு பிராந்திய தலைநகரம் ஆகும். இந்தநிலையில் ரஷ்ய இராணுவத் தொடரணி மேற்காக சுமியைக் கடந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்றதாகக் கூறியுள்ளார். அருகிலுள்ள கொனோடோப் நகரம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
புடினுடன் கலந்துரையாடிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார். தமது அழைப்புகளுக்கு புட்டின் பதில் வழங்காமை காரணமாக, அவருடன் தொடர்பு கொள்ளுமாறு உக்ரேனிய ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கு இணங்க புடினுடன் தாம் பேசியதாக மேக்ரொன் தெரிவித்துள்ளார். இதன்போது உக்ரெய்ன் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு புடினிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்பு "வெளிப்படையானது, நேரடியானது, விரைவானது" என்றும் மேக்ரோன் கூறியுள்ளார். எனினும் தமது கோரிக்கைக்கு புடின் கூறிய பதில் தொடர்பாக மேக்ரோன் எதனையும் தெரிவிக்கவில்லை. |
கீவில் ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – உக்ரைன் அதிகாரி
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அதிகாலையில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி தொடர்பாக தீ மற்றும் கரும்புகை வெளியேறும் புகைப்படம் ஒன்றை, என்டிஏ எனும், உக்ரைனிய தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது.
|
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான போர் நேற்றையதினம் உக்கிரமடைந்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் போர் ஆரம்பமாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது.
இரு குண்டு வெடிப்புகளை கேட்டதாக, உள்துறை முன்னாள் துணை அமைச்சர் ஆன்டன் ஹெராஷ்சென்கோ கூறியுள்ளதாக, உக்ரைனின் யூனியன் செய்தி முகமைதெரிவித்துள்ளது.
மேலும், தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து உக்ரைன் இராணுவம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் வலுக்கும் போர்! முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..