ரஷ்யா மீது பாரிய வான்வழி தாக்குதல்: மூடப்பட்ட விமான நிலையங்கள்
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ(Moscow) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உக்ரைன் பாரிய வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த பாரிய தாக்குதல் இன்று(10.11.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
34 டிரோன்கள்
இந்நிலையில், உக்ரைன் இராணுவம் மொத்தம் 34 டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோமற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மொஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 34 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள்
பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
