தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முல்லைத்தீவு பாடசாலை
தேசிய மட்டத்தில் நடைபெற்ற அகில இலங்கை பரதநாட்டியப் போட்டியில் முல்லைத்தீவு(Mullaitivu) பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று (09.11.2024) திருகோணமலையில் நடைபெற்ற தேசிய மட்டல்திலான இப் போட்டிகளில் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு போட்டியிட்டிருந்தனர்.
இப்போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் இரு நாட்டிய நிகழ்ச்சிகள் அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளன.
கிடைத்த முதலிடம்
கொற்றவையாடல், மல்லாடல் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பாடசாலையின் முயற்சிக்கு கிடைத்த பரிசாக தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

இவ்வெற்றியை பெற்றுக்கொள்ள மாணவர்களை பயிற்றுவித்த, ஆசிரியை ஜஸ்மினி சிவகுமாரனுக்கு பாடசாலை தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam