பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2027 ஆம் கல்வியாண்டிற்காக, 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் எழுதுபொருள் உதவித்தொகை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சம் பாடசாலை மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
உதவித்தொகை திட்டம்
இதேபோல், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட மேலும் 50 இலட்சம் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகை திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.
ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு