மருந்துகளின் விலை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
சந்தையில் அதிக விலை கொண்ட 13 மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இன்று(01.10.2026) கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
5.7 பில்லியன் ரூபாய் இலாபம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக விலை கொண்ட 13 மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மட்டும் அரசாங்கத்திற்கு கிடைக்கும் இலாபம் ரூ. 5.7 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பெறும் இலாபம் அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளின் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. நீண்ட காலத்திற்கு உட்கொள்ளக்கூடிய மருந்துகளின் விலையைத்தான் எங்களால் குறைக்க முடிந்துள்ளது என்றார்.
ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்