ரொனால்டோ போட்டியில் களமிறக்கப்படாததற்கு இதுதான் காரணம்!
ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானதன் காரணம் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தகவல் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கத்தார் உலகக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமர வைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மொராக்கோ உடனான காலிறுதிப் போட்டியிலும் ரொனால்டோ கடைசி 30 நிமிடங்களில்தான் விளையாட அனுப்பப்பட்டார். இப்போட்டியில் மொராக்கோ வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
வெளியே உட்கார வைக்கப்படதற்கு காரணம்
இந்த நிலையில்,பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதால் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானார் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“உலக கோப்பை போட்டியில் ரொனால்டோவை போர்த்துக்கல் அணி சரியாகப் பயன்படுத்தவில்லை. வீணடித்துவிட்டார்கள்.
ரொனால்டோ போன்ற ஒரு கால்பந்து வீரரை போட்டி முடிய 30 நிமிடங்களே உள்ள நிலையில் ஆடுகளத்திற்கு அனுப்பியது அவரது உளவியலை அழித்து, அவரது ஆற்றலையும் இழக்கச் செய்தது.”என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
