வெளிநாடொன்றில் மற்றுமொரு ஆபத்தான இலங்கையர் அதிரடியாக கைது
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரரான 'ரொன் மல்லி' எனப்படும் சரித் சந்தகெலும் பல்கேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில், பல்கேரிய பாதுகாப்புப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சி
போலியான தகவல்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றபோதே அவர் பல்கேரியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

அவரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் இன்டர்போலுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக துபாயில் வசித்துக்கொண்டு இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் வெள்ளவத்தையை சேர்ந்த சரித் சந்தகெலும், 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri