சிறையிலிருந்து ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச அவசர கடிதம்
தற்போது விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி (VAT) மற்றும் பிற பொருந்தக்கூடிய வரிகளை நீக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒக்டோபர் 9 ஆம் திகதியிட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதி
பாடசாலை புத்தகங்கள், எழுதுபொருட்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி நிவாரணம் வழங்குவது குறித்த NPP-யின் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ராஜபக்ச ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பால், முட்டை மற்றும் குழந்தை பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விகிதத்தை முன்மொழிந்த தேர்தல் அறிக்கையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொருட்கள் மீதான தற்போதைய வரிகளை மறுபரிசீலனை செய்து, வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கைகள், அதிகரித்து வரும் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ளும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குவதோடு, குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை