மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திலிருந்து வெளியேறிய ரோஹித
புதிய இணைப்பு
பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
நிறுவனம் ஒன்றில் தாம் மேற்கொண்ட முதலீடு தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்ச இன்று காலை (25) பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் அவர் பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார்.
மிரிஹானை பகுதியில் உள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO