அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்த இந்திய ரசிகர்: அரங்கை நெகிழ வைத்த ரோஹித் சர்மா
இந்தியா (India) மற்றும் பங்களாதேஸ் (Bangladesh) இடையிலான பயிற்சிப் போட்டியில் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவரை பண்புடன் நடத்துமாறு இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma) அமெரிக்க பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த போட்டியானது, நியூயார்க்கின் (NewYork) நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி வெற்றி
அதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணியினால் 122 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
The fan who breached the field and hugged Rohit Sharma was taken down by the USA police.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 1, 2024
- Rohit requested the officers to go easy on them. pic.twitter.com/MWWCNeF3U2
எனவே, இந்திய அணி 60 ஓட்டங்களால் போட்டியை வெற்றிகொண்டது.
அதேவேளை, பங்களாதேஸ் அணி துடுப்பெடுத்தாடும் போது அரங்கிலிருந்த ரோஹித் சர்மாவின் ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்துள்ளார்.
ரோஹித்தின் கோரிக்கை
மைதானத்துக்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை நோக்கி ஓடிய ரசிகரை பின்தொடர்ந்த நியூயார்க் பொலிஸார், அவரை தரையில் வீழ்த்தி கைவிலங்கை மாட்டியுள்ளனர்.
இதன்போது, குறித்த ரசிகரை பண்புடன் நடத்துமாறு ரோஹித் சர்மா, நியூயார்க் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |