முல்லைத்தீவில் கொள்ளையர்களை மடக்கி பிடித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வணிக நிலையங்களில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியான கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் இரு கொள்ளையர்களை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று 01.08.2024 அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு,சிவநகர்,ஆனந்தபுரம் நகர் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 வணிக நிலையங்கள் கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவங்கள்
இந்த கொள்ளைச் சம்பவங்களை அவாதானித்த சில வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இரவுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிதிரிபவர்களை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு இன்று(01) அதிகாலை சிவநகர் பகுதியில் வணிக நிலையம் ஒன்றினை உடைத்து கொள்ளையிட முயற்சித்த கொள்ளையர்கள் இருவரை உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 14 அகவையுடைய மற்றும் 24 அகவையுடைய இரு இளைஞர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: படமெடுத்து கம்பீரகமாக நிற்கும் ராஜநாகம்... சாமர்த்தியமாக கையாளும் நபரின் அசத்தல் காட்சி Manithan
