பொதுஜன பெரமுனவில் வலுக்கும் அரசியல் மோதல்: ரணிலை புறக்கணிக்க மறுக்கும் மகிந்த!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளகக் கலந்துரையாடல்களின்படி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரும்பான்மையினரால் தம்மிக்க பெரேராவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளர் தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவுக்கு நான்கு உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா
மேலும், தம்மிக்க பெரேராவுக்கு வேட்புமனுவை வழங்குவதே பொருத்தமானது என பெரும்பான்மையான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (01) மஹரகமவில் (Maharagama) உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |