முல்லைத்தீவில் வங்கி ஒன்றில் திருட்டு: இளைஞன் கைது
முல்லைத்தீவில் வங்கியொன்றில் இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று(20.04.2025) இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி(CRB) கடந்த 17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும்(I phone), 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதனையடுத்து, குறித்த வங்கி நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து, குறித்த கிராமிய கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின் உதவியுடன் திருடப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரின் முகநூலில் போடப்பட்ட தொலைபேசி பதிவினையும் அடித்தளமாக கொண்டு நேற்றையதினம்(20.04.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்காெண்டு வருகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
