மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேரை மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த பிடியாணை
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, மார்ச் 05 ஆம் திகதி மேர்வின் சில்வாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது.
அத்துடன் தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மற்றும் மில்ரோய் பெரேரா (Milroy Perera) ஆகியோரைக் கைது செய்யுமாறும் மஹர நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
